தமிழ்நாடு முழுவதும் 280 தீ விபத்து சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக தீயணைப்புத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. அதில், ‘தீபாவளி பண்டிகையையொட்டி, பட்டாசுகளால் ஏற்படக்கூடிய தீ விபத்துகளுக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் உள்ள 352 தீயணைப்பு நிலையங்களில் 6,673 வீரர்கள் தயார் நிலையில் இருந்துள்ளது. இதையொட்டி, சென்னைக்கு பிற மாவட்டங்களில் இருந்து 23 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. இந்த நிலையில் நேற்று தீபாவளி அன்று தமிழகம் முழுவதும் 280 தீ விபத்து சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. குறிப்பாக, சென்னையில் 180 தீ விபத்து சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. மேலும், இந்தாண்டு தீபாவளி தினத்தில் பெரிய தீ விபத்து சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை என்றும், உயிர் பலி எதுவும் நிகழவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.