தெலங்கானாவின் ஹைதராபாத் நகரில் இருந்து உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று மத்தியப் பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில் சுஹாகி பஹரி பகுதியில் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 14 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த 40 பேர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். இதுத்தொடர்பாக காவல்துறை வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.