சென்னையில் செல்வ அன்பரசன் இயக்கத்தில் குளோபல் எண்டர்டெய்ன்மென்ட் தயாரித்து ஹை கிரியேட்டர்ஸ் வெளியிடும் “பேய காணோம்” திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இந்த திரைப்படத்தில் இயக்குநர் தருண் கோபி, நடிகை மீரா மிதுன், நகைச்சுவை நடிகர் கோதண்டம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வன்னியரசு, நடப்பு தயாரிப்பாளர் சங்க செயலாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா, திரைப்பட தயாரிப்பாளர் சங்க துணைத் தலைவர் கதிரேசன், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் திருமலை ஆகியோர் “பேய காணோம்” திரைப்படத்தின் பாடல்களை வெளியிட ஹை கிரியேட்டர்ஸ் பெற்றுக்கொண்டனர்.
இந்த படத்தின் பாடல் உரிமத்தையும் ஹை கிரியேட்டர்ஸ் பெற்றுள்ளது. “பேய காணோம்” திரைப்படம் விரைவில் திரையரங்கில் வெளியாகவுள்ள நிலையில் அறிமுக இயக்குநர் செல்வ அன்பரசன் அடுத்ததாக நகைச்சுவை நடிகர் கவுண்டமணியுடன் அடுத்த படம் இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.