60-வது தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டி தெலுங்கானா மாநிலம் வாரங்கலில் நடைபெற்று வருகிறது. 2-வது நாளான நேற்று நடந்த பெண்களுக்கான 1500 மீட்டர் ஓட்டத்தில் பஞ்சாப் வீராங்கனை ஹர்மிலன் கவுர் பெய்ன்ஸ் 4 நிமிடம் 05.39 வினாடிகளில் இலக்கை கடந்து 19 ஆண்டு கால தேசிய சாதனையை தகர்த்து தங்கப்பதக்கத்தை வென்றார். இதற்கு முன்பு 2002-ம் ஆண்டு ஆசிய விளையாட்டில் இந்தியாவின் சுனிதா ராணி 4 நிமிடம் 06.03 வினாடியில் இலக்கை எட்டியதே தேசிய சாதனையாக இருந்தது.