குஜராத் மாநிலத்தின் காந்திநகரில் இன்று நடைபெறும் பாதுகாப்பு கண்காட்சியை (DefExpo-2022) பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இரண்டு நாள் பயணமாக குஜராத் வந்துள்ள பிரதமர் மோடி நாட்டின் மிகப்பெரிய பாதுகாப்புத்துறை கண்காட்சியின் தொடக்க விழாவில் குஜராத் ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத் மற்றும் முதலமைச்சர் பூபேந்திர படேல் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த கண்காட்சியில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் தயாரித்த ஹெச்டிடி-40 ரக உள்நாட்டு பயிற்சி விமானத்தை அவர் திறந்து வைத்தார். குறிப்பாக இந்த கண்காட்சியில், முதல்முறையாக பாதுகாப்புத் துறையில் முதலீட்டாளர்கள் மாநாடும் நடத்தப்பட உள்ளது. பின்னர், அந்த மாநிலத்தில் சுமார் ரூ.15,670 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.