குழந்தைகளுக்கான பிரத்யோக தொலைக்காட்சியான கார்டூன் நெட்வொர்க் 30 ஆண்டுகளுக்கு முன் இதே அக்டோபர் மாதத்தில்தான் தனது ஒளிபரப்பைத் தொடங்கியது. இந்த நிலையில் 30 ஆண்டுகளாக இயங்கி வந்த இந்த தொலைக்காட்சி இந்தாண்டு தன் பிறந்த நாளில் ஒளிபரப்பை நிறுத்தவுள்ளதாகவும் இனி கார்டூன் நெட்வொர்க் சேனல் வார்னர் ப்ரோஸ் நிறுவனத்துடன் இணையவுள்ளதாக செய்திகள் வெளியாகின. இதையடுத்து, கார்டூன் நெட்வொர்க் ரசிகர்கள் இணையத்தில் கண்ணீர் விடத்தொடங்கினர். தற்போது, அவர்களுக்கு ஆதரவளிக்கும் படியான செய்தி ஒன்று கார்ட்டூன் நெட்வொர்க் வெளியிட்டுள்ளது. அதாவது, நாங்கள் இன்னும் இறந்துவிடவில்லை. இப்போதுதான் எங்களுக்கு 30 வயதாகிறது என்று, கார்ட்டூன் நெட்வொர்க் தொலைக்காட்சி நிர்வாகம் தனக்காக வருந்திய ரசிகர்களை தேற்றும் வகையிலான தகவலை வெளியிட்டுள்ளது.