இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி, தலைநகர் டெல்லி, பஞ்சாப், ஹரியானா, உத்திரபிரதேசம், உத்தரகண்ட், ராஜஸ்தான் ஆகிய ஆறு மாநிலங்களில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். இந்தியா மற்றும் சர்வதேச அளவில் இருந்து செயல்பட்டு வரும் தேசவிரோதிகளால் அதிகரித்து வரும் போதைப்பொருள் கடத்தலை தகர்க்க என்.ஐ.ஏ. அதிகாரிகள் இந்த சோதனையை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த சோதனையில் பல தகவல்கள் வெளியே வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.