அண்மை காலமாக நடிகர் சிம்புவின் மாநாடு, வெந்து தணிந்தது காடு திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து, தற்போது கிருஷ்ணா இயக்கத்தில் ‘பத்து தல’ என்ற திரைப்படத்தில் நடிகர் சிம்பு நடித்து வருகிறார். இந்த நிலையில், சத்ராம் இயக்கி விரைவில் வெளியாக இருக்கும் ‘டபுள் எக்ஸ் எல்’ என்ற இந்தி திரைப்படத்தில் தாலி…தாலி என்ற பாடலை சிம்பு பாடியுள்ளார். இதையடுத்து, சிம்புவுக்கு இந்தி திரைப்பட வாய்ப்பும் வந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.