உலகப் புகழ்ப்பெற்ற இலக்கியத்திற்கான புக்கர் பரிசு உலகின் முழுவதும் உள்ள நாடுகளில் பிராந்திய மொழியில் எழுதப்பட்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட நாவலுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டு புக்கர் பரிசு வழங்கும் விழா லண்டனில் உள்ள ரவுண்ட்ஹவுசில் நடைபெற்றது. இதில், உலகம் முழுவதிலும் இருந்து 169 நாவல்கள் விருதுக்காக சமர்பிக்கப்பட்ட நிலையில், இலங்கையை சேர்ந்த எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக எழுதிய “தி செவன் மூன்ஸ் ஆப் மாலி அல்மேடா” என்ற புனைவு நாவல் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது. இந்த நாவல் இலங்கையை பற்றியும், அங்கு நடந்த போரினால் பாதிக்கப்பட்ட மக்களை பற்றியும் எடுத்துரைக்கும் புனைவு ஆகும்.