சென்னை, திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள நியாயவிலைக் கடையில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் பொது விநியோகத் திட்ட அங்காடிகளில் கண் கருவிழி சரிபார்ப்பு முறையில் பொருள் விநியோகம் செய்யும் திட்டத்தை உணவுத்துறை அமைச்சர் சக்ரபாணி தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், நகர்புறத்தில் திருவல்லிகேணியிலும், கிராமப்புறத்தில் அரியலூர் மாவட்டத்தில் இன்று இந்த திட்டத்தை தொடங்கி வைத்துள்ளோம். இந்த முறை மக்கள் மத்தியில் வரவேற்கப்பட்டால் மலைப்பகுதி கிராமப்புறங்களில் உட்பட்ட தமிழகம் முழுவதும் கொண்டுவரப்படும் என தெரிவித்தார். இந்தியாவைப் பொருத்தவரை கேரளா, தெலுங்கானா, அசாம், உத்திரபிரதேசம் உங்களிடம் நான்கு மாநிலங்களில் கண் கருவிழி மூலம் பொருட்களை பெரும் முறை நடைமுறையில் உள்ளது. சோதனை அடிப்படையில் தமிழகத்தில் இரண்டு இடங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சி பொறுப்பு ஏற்று 18 மாதங்களில் 3 லட்சத்து 32 ஆயிரம் பேருக்கு குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளது. தற்போது 2 கோடியே 23 லட்சம் குடும்ப அட்டைகள் நடைமுறையில் இருக்கிறது.