சென்னை ராயபுரத்தில் மத்திய கூட்டுறவு வங்கியின் புதிய கிளை கட்டிடத்தை அமைச்சர்கள் பெரியசாமி மற்றும் சேகர் பாபு ஆகியோர் திறந்து வைத்தனர். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, ”சுய உதவிக் குழு கடனுக்கான ரசீதுகள் தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது இன்னும் ஒரு வார காலத்திற்குள் அந்த பணிகள் முடிந்து எப்படி நகை கடன் தள்ளுபடி வழங்கப்பட்டதோ அதேபோல சுய உதவி குழுக்களுக்கான கடன் தள்ளுபடி செய்யப்பட்டு அந்த ரசீது வழங்கப்படும்” என்பதை தெரிவித்தார்.