அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. இதில், மல்லிகார்ஜூன கார்கே மற்றும் சசி தரூர் தலைவர் பதவிக்கு போட்டியிடுகின்றனர். டெல்லியில் இருந்து அனைத்து மாநிலங்களிலும் வாக்குப் பதிவுக்கு தேவையான வாக்குப் பெட்டிகள், வாக்கு சீட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தேர்தலில் காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர்கள், காங்கிரஸ் எம்.பி.க்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், காங்கிரஸ் மாவட்டங்களின் தலைவர்கள், காங்கிரஸ் மாநில கமிட்டிகளின் முன்னாள் தலைவர்கள் ஆகியோர் வாக்களிக்கும் உரிமை பெற்றவர்கள். அனைவருக்கும் கியூஆர் கோடுடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டை பொருத்தவரை காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்கும் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதியுடைய 711 பேர் சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் வாக்களின்றனர்.