தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை கூடியது. கூட்டத்தொடரில், முதலில் மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் கூடி, எத்தனை நாட்கள் கூட்டத்தொடரை நடத்துவது என்பது குறித்து முடிவெடுக்கப்படவுள்ளது. இந்த கூட்டத்தொடரில், மறைந்தம் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளதுடன், ஆன்லைன் ரம்மி தடை அவசர சட்ட மசோதாவும் நிறைவேற்றப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பு விடுத்த கோரிக்கையை சபாநாயகர் அப்பாவு நிராகரித்தார். இதையடுத்து, இன்றைய கூட்டத்தை சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக எம்எல்ஏக்கள் புறக்கணித்தனர்.