தெலுங்கு திரையுலக சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடித்து வெளியாகி இருக்கும் திரைப்படம் ‘காட்பாதர்’. ஆர்.பி.சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து சிரஞ்சீவி தயாரித்துள்ள காட்பாதர் திரைப்படத்தில் சல்மான்கான், சமுத்திரக்கனி, சத்யதேவ், தான்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தெலுங்கு மற்றும் இந்தி மொழியில் வெளியாகி இருக்கும் இந்த திரைப்படம் வெற்றிகரமாக திரையங்கில் ஓடிக்கொண்டு இருப்பதால் தற்போது வரை ரூ.120 கோடி வசூல் செய்துள்ளது. இதனால், மகிழ்ச்சியில் உள்ள நடிகர் சிரஞ்சீவி கடந்த ஏப்ரல் மாதம் தனது மகன் ராம்சரணுடன் இணைந்து நடித்து வெளியான ஆச்சார்யா படம் படுதோல்விக்கு பொறுப்பேற்று அந்த படத்துக்காக பெற்ற சம்பளத்தை திருப்பி கொடுத்துள்ளார். இது சினிமா துறையில் பேசுபொருளாகியுள்ளது. இதுகுறித்து ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் “நானும், ராம்சரணும் ஆச்சார்யா படத்துக்காக வாங்கிய சம்பளத்தில் 80 சதவீதத்தை தயாரிப்பாளரிடம் திருப்பி கொடுத்துவிட்டோம்” என்று பேசியுள்ளார். மேலும், தமிழிலும் விரைவில் காட்பாதர் டப் செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.