பாகிஸ்தான் நாட்டின் பலிசிஸ்தான் மாகாண முன்னாள் தலைமை நீதிபதி முஹம்மது நூர் மெஸ்கன்சாய் பலுசிஸ்தானில் உள்ள ஒரு மசூதிக்கு வெளியே நின்று கொண்டிருந்தபோது அவர் மீது திடீரென பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், படுகாயமடைந்த அவர் மருத்துவமனைக்கு அழைத்துசென்ற நிலையில் உயிரிழந்துள்ளார். பல்வேறு முக்கிய வழக்குகளில் நீதியின் பக்கம் நின்று தீர்ப்பளித்த நீதிபதி பயங்கரவாதிகளால் பரிதாபமாக துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டது அந்த பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.