முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் 91ஆவது பிறந்த தினம் இன்று. இதையொட்டி ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் அடுத்த பேய்கரும்பில் உள்ள அவரது நினைவிடத்தில் குடும்பத்தினர் மற்றும் அரசு அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் மரியாதை செலுத்தினர்.