day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

“மகிழ்ச்சியை வெளிபடுத்தும் கருவியை கண்டுபிடித்த பெண் விஞ்ஞானி” !

“மகிழ்ச்சியை வெளிபடுத்தும் கருவியை கண்டுபிடித்த பெண் விஞ்ஞானி” !

நமது மகிழ்ச்சியை முழுமையாக வெளிப்படுத்த முடியவில்லை என்றாலும்,அதனை அளவிடும் கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளார் அறிவியல் விஞ்ஞானி ஷாலினி மேனன்.
கேரளாவில் உள்ள கொச்சின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (CUSAT) ஆராய்ச்சியாளராக உள்ளார் டாக்டர் ஷாலினி மேனன். நரம்பு செல்களால் உற்பத்தி செய்யப்படும் டோபமைன் போன்ற இரசாயனங்கள் மனிதனின் உணர்ச்சிகளின்  மகிழ்ச்சியைத் தீர்மானிப்பதாக கூறுகிறார். இதற்காக அவர் டோபமைனின் அளவை அளக்க டோபா மீட்டர் என்ற கருவியை கண்டுபிடித்துள்ளார். இந்த கருவியின் விலை 4000 ரூபாய் ஆகும். இதற்காக ஒரு துளி ரத்த மாதிரிகளை சேகரித்து இரண்டு விநாடிகளில் நாம் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்பதை தெரிவித்து விடுகிறார்.
மேலும் இந்த கருவியை கொண்டு வேறு சில நோய்களை கண்டறியும் முறையும் அந்தக் கருவியில் உருவாக்கியுள்ளார். இதற்கு மருத்துவ கருவிக்கு காப்புரிமை கேட்டு விண்ணப்பித்துள்ளார். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் தலைவர் டாக்டர் கே கிரீஷ்குமாரின் வழிகாட்டுதலின் படி புரோச்சிப் தொழில்நுட்ப ஆராய்ச்சி குழுவுடன் இணைந்து இந்த கருவியை கண்டு பிடித்துள்ளார். பெண் விஞ்ஞானியின் இந்த அற்புதச் செயலை  அறிவியல் அறிஞர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!