கடலூரில் ஜெயிலர் படப்பிடிப்பு நடைபெற்று வரும் இடத்தில், நடிகர் ரஜினிகாந்தை பார்க்க ரசிகர்கள் படையெடுத்து சென்ற வீடியோ வைரலாகி வருகிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த நிலையில், கடலூரை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றுள்ளார். இந்த தகவலை அறிந்த அந்த பகுதியில் உள்ள ரஜினி ரசிகர்கள் அவரை காண படப்பிடிப்பு தளம் அருகே கூடியுள்ளனர். இதையடுத்து, அங்கு ரஜினியை பார்த்து ரசிகர்கள் முழக்கமிட்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.