ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் இன்றைய போட்டியில் 8ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை-பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை நேரு விளையாட்டு அரங்கில் இந்த போட்டி நடைபெற உள்ளது. 11 அணிகள் பங்கேற்றுள்ள 9-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டிகள் சென்னை, கொச்சி, பெங்களூரு, மும்பை உள்பட 11 நகரங்களில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் 2 முறை மோத வேண்டும். இந்த லீக் சுற்று முடிவில் டாப் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே ஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.