மின் நுகர்வோரின், ‘ஆதார்’ எண்ணுடன், மின் இணைப்பு எண்ணை இணைக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்து அரசிதழ் வெளியீடு செய்துள்ளது. இந்த நிலையில், மின் நுகர்வோருக்கு முதல் 100 யூனிட்கள் இலவசம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. சலுகைகளை பெற விரும்பும் தகுதியான நபர் ஆதார் எண்ணை அளிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மின் கட்டணம் செலுத்தும்போது ஆதார் எண்ணை அளிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக அரசின் பல்வேறு திட்டங்களின் சலுகைகளைப் பெற ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.