உலகம் முழுவதிலும் கொரோனா பெருந்தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டுவர அரசுக்கு பெரும் உதவியாக இருந்தவைகளில் ஒன்று, பணியாளர்கள் வீட்டில் இருந்தபடியே அலுவலக பணியை செய்யும் ஒர்க் ஃப்ரம் ஹோம் நடைமுறை. ஆனால், இன்னும் பல நாடுகளில் ஏன் இந்தியாவில் கூட இந்த நடைமுறை நீடிப்பதால் பல பணியாளர்களை சோர்வடைய வைத்துள்ளது. இந்த வரிசையில், இங்கிலாந்தில் வீட்டிலிருந்து வேலை செய்யும் பழக்கம் மக்களுக்கு சலிப்பை ஏற்படுத்தவே, அங்குள்ள பாரிலிருந்து வேலை செய்யும் வசதி ஏற்படுத்தியுள்ளன. இதனை ஏற்பாடு செய்துள்ள பார்கள் அங்கு அன்லிமிடெட் டீ, காபி மற்றும் ஒர்க் ஸ்பேஸ், வைபை, சார்ஜிங் பாண்ட் உள்ளிட்ட பல வசதிகளோடு செயல்பட்டு வருகின்றன. இந்த புதிய யுக்தி இங்கிலாந்து மக்களிடையே தற்போது பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.