ஆந்திரா மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், அனந்தபூர் நகரில் உள்ள புக்கராய சமுத்திரம் அருகே இருக்கும் ஏரி கனமழையால் நிரம்பி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஏரியில் இருந்து வெளியேறும் நீர் தரைப்பாலத்தை மூழ்கடித்து காட்டாற்று வெள்ளமாக சென்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், அந்த வழியாக தரைப்பாலத்தை கடக்க முயன்ற லாரி ஒன்று வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டுள்ளது. இந்த காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது. நல்வாய்ப்பாக, தண்ணீரில் தத்தளிக்க லாரி டிரைவர், கிளீனர் நீந்தி உயிர் தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.