பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரில் இருந்து இந்தியாவின் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகர் நோக்கி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, நூரியாபாத் என்ற இடத்தின் அருகே பேருந்தின் ஏர் கண்டிஷன் யூனிட்டில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் சாலையில் பேருந்து நிறுத்தப்பட்டது. தீ மளமளவென பரவவே பேருந்தில் இருந்து கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு பயணிகள் அவசரமாக வெளியேறினர். ஆனால், அதற்குள் பேருந்து முழுவதும் தீ வேகமாக பரவத்தொடங்கியது. இதனால், பேருந்துக்குள் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்ட 12 குழந்தைகள் உள்பட 18 பயணிகள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.