இமாச்சலப் பிரதேச மாநிலத்துக்கு இன்று பயணம் மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி அங்கு உன்னாவ் பகுதியில் 4ஆவது ‘வந்தே பாரத்’ அதிவேக ரயிலின் சேவை நாட்டுக்கு அற்பணிக்கவுள்ளார். மேலும், அந்த மாநிலத்தில் பிரதமர் மோடி ஐ.ஐ.டி. தொடக்க விழா, மருந்து பூங்கா அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்று திட்டங்களை தொடங்கி வைக்கவுள்ளார். முன்னதாக, இந்த மாத தொடக்கத்தில் குஜராத் மாநிலத்தில் இந்தியாவில் முதல் அதிவிரைவு ரயிலாகக் கருதப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ள இரு மாநிலங்களும் இந்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.