ஹுமா குரேஷி & சொனாக்ஷி சின்ஹா நடித்திருக்கும் பாலிவுட் திரைப்படம் ”Double XL”. இந்த திரைப்படத்தின் இறுதி பணிகள் நிறைவடைந்ததையொட்டி வரும் நவம்பர் 4ஆம் தேதி திரைக்கு வரும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த நிலையில், “Double XL” திரைப்படத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் நடித்துள்ளதாக ஹுமா குரேஷி நடனமாடுவது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது. முன்னதாக, பெண்களின் உருவம் குறித்து நகைச்சுவை வாயிலான கருத்து சொல்ல இருக்கும் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது. எதுஎப்படியோ, மைதானத்தில் மட்டும் பார்த்த தவானை இனி திரையிலும் காணலாம் என கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்து இருப்பது மட்டும் நிச்சயம்.