சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்திலிருந்தே குறைந்து வருகிறது. கடந்த வாரம் ஆயுதபூஜை பண்டிகையை யொட்டி 1 சவரன் தங்கம் ரூ.38,200-க்கு விற்கப்பட்டது. மறுநாள் அது சற்று உயர்ந்து ரூ.38,680 ஆக விற்பனையானது. மீண்டும் 6-ந்தேதி விலை உயர்ந்து ரூ.38,720-க்கு விற்பனையானது. பின்னர் 8 மற்றும் 9-ந்தேதிகளில் அதே விலையில் நீடித்தது. இந்த வார தொடக்கத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.38,200-க்கு விற்கப்பட்டது. மேலும் இன்று சவரனுக்கு ரூ.280 குறைந்து 1 பவுன் தங்கம் ரூ.37,920-க்கு விற்னையாகிறது. நேற்று 1 கிராம் தங்கம் ரூ.4775-க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், இன்று கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.4740-க்கு விற்கப்படுகிறது. இதேபோல் வெள்ளி விலையும் குறைந்துள்ளது. வெள்ளி இன்று கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.64-க்கு விற்பனையாகிறது.