ஆப்கானிஸ்தானில் பெண்கள் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில்,தற்போது பல்கலை கழகங்களில் பெண்களுக்கு என தனி வகுப்பறை உருவாக்கப்பட்டுள்ளன.
ஆப்கானிஸ்தானில் எது நடக்க கூடாது என்று உலக நாடுகள் பயந்துக் கொண்டிருந்ததோ, அது அங்கு தற்போது நடந்தேறியுள்ளது. 20 ஆண்டுகளுக்கு பிறகு ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.இந்த நடவடிக்கையால்,அங்குள்ள பெண்கள் குழந்தைகளின் நிலை என்ன ஆகுமோ என்றிருந்த நிலையில், தற்போது அவர்களை வதைக்கும் சூழல் உருவாகியுள்ளது. தாலிபான்களின் அடக்குமுறை மற்றும் உரிமைகளை எதிர்த்து போராடி வரும் பெண்களை தாலிபான்கள் அரசாங்கம் சித்ரவதை செய்யத் தொடங்கியுள்ளன.அதோடு பெண்கள் விளையாடவும் தடைவிதிக்கப்பட்டுள்ளன.இந்த நிலையில் பல்கலைகழகங்களில் முதுகலை படிக்கும் பெண்களுக்கு தனி வகுப்பறையை உருவாக்க தாலிபான்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.குறிப்பாக ஆண்கள் இல்லாத வகுப்பறையை தாலிபான்கள் உருவாக்கியுள்ளனர்.மேலும் அவ்வாறு படிக்க வரும் பெண்கள் இஸ்லாமிய ஆடைகுறியீட்டுடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.