சிதம்பரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள காந்தி சிலை பேருந்து நிறுத்த நிழற்குடையில் பள்ளி சீருடையில் இருக்கும் 12ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கு மாணவன் ஒருவர் மஞ்சள் கயிற்றால் கோர்க்கப்பட்ட தாலியை கட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. வீடியோ வைரலானதைத்தொடர்ந்து, இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சிதம்பரம் அருகே உள்ள பெராம்பட்டு ஊராட்சிக்கு உள்பட்ட வெங்காய தலமேடு கிராமத்தைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிக்கு, சிதம்பரம் அருகே உள்ள வடகரிராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவன் தாலி கட்டியுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, சமூக வலைதளங்களில், சமூக ஆர்வலர்கள் பலர் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.