சென்னை, திருவல்லிக்கேணி பகுதியில் பானிபூரி சாப்பிட்டு பணம் கொடுக்காமல் சென்றவரை தட்டிக்கேட்ட வடமாநில தொழிலாளி அமர்சிங்-கை (39) ஆத்திரத்தில் கல்லால் அடித்ததில் உள்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில், இன்று பானிபூரி வியாபாரி இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அமர்சிங் (39) கடந்த மூன்று மாதங்களுக்கு முன் சென்னை வந்து திருவல்லிக்கேணி ரோட்டரி நகர் பகுதியில் தங்கி தள்ளுவண்டியில் பானிபூரி வியாபாரம் செய்து வந்தார். மேலும், அவரின் உயிரிழப்புக்கான காரணம் தெரியாததால் பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே இவ்வழக்கை கொலை வழக்காக மாற்றுவது குறித்து முடிவு செய்யப்படும் என காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பானிபூரி வியாபாரி அமர் சிங்-ஐ தாக்கிய திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (எ) விக்கி (26) மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விக்னேஷை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்துள்ளனர்.