மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் “தலைவி “இந்தப் படம் இந்தி,தமிழ் உள்பட மூன்று மொழிகளில் வெளியாகி உள்ளது.எம்.ஜி.ஆராக அரவிந்தசாமியும், ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத்தும் நடித்துள்ளனர்.ஜெயலலிதாவின் பள்ளிப் பருவம் தொடங்கி ஆட்சியில் அமரும் வரை இந்த திரைப்படம் பேசுகிறது. கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி வெளியாகி பல்வேறு விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்தநிலையில், நடிகர் ரஜினிகாந்த் ‘தலைவி’ படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் ஏ.எல் விஜய்யை போனில் தொடர்புகொண்டு படத்தையும், படக்குழுவையும் பாராட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.