சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள திராவிட முன்னேற்ற கழகம் கட்சி தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், அந்த கட்சி தலைவர் தோ்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது வேட்புமனுவை அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதியிடம் வழங்கினார். இதேபோன்று, பொதுச்செயலாளா் பதவிக்கு அமைச்சர் துரைமுருகனும், பொருளாளா் பதவிக்கு திமுக நாடாளுமன்ற குழுத் தலைவா் டி.ஆா்.பாலுவும் வேட்புமனுவை தாக்கல் செய்தனர். இதையடுத்து, வரும் 9ஆம் தேதி சென்னையில் நடைபெறும் திமுக பொதுக்குழுவில் தலைவா், பொதுச்செயலாளா், பொருளாளா், நான்கு தணிக்கைக் குழு உறுப்பினருக்கான தோ்தல்கள் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.