சிவகங்கை மாவட்டம் கல்லூரி சாலையில் வசித்து வரும் விக்னேஷ் என்பவர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் இன்று காலை சோதனை நடத்தினர். சோதனை அதிகாலை தொடங்கி சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நடந்துள்ளது. தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பில் இருந்ததாக கூறி இளைஞர் வீட்டில் சோதனை மேற்கொண்ட என்ஐஏ அதிகாரிகள் அவரின் வீட்டில் வைத்திருந்த சில புத்தகங்கள் மற்றும் ஆவணங்களை சோதனை முடிவில் எடுத்து சென்றுள்ளனர். கார் ஓட்டுநரான விக்னேஷ் இலங்கையில் பயிற்சிக்கு சென்று வந்ததாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.