டி20 உலகக் கோப்பைப் போட்டி இந்த மாதம் நடக்கவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக இந்திய அணி அக்டோபர் 6ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல இருக்கிறது. தொடர்ந்து, அக்டோபர் 13ஆம் தேதி வரை பெர்த்தில் பயிற்சி மேற்கொள்ளும் இந்திய அணி, பிரிஸ்பேனுக்குச் சென்று ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான பயிற்சி ஆட்டங்களில் விளையாட உள்ளது. இந்த நிலையில், டி20 உலகக் கோப்பைப் போட்டித் தொடருக்கான நடுவர்கள் பட்டியலை ஐசிசி வெளியிட்டு உள்ளது. அதன்படி, 16 பேர் கொண்ட நடுவர்கள் பட்டியலில் இந்திய நடுவர் நிதின் மேனன், இலங்கை நடுவர் தர்மசேனா, பாகிஸ்தான் நடுவர் அலீம்தார், தென் ஆப்பிரிக்க நடுவர் எராஸ்மஸ், இங்கிலாந்து நடுவர் கெட்டில்பரோ உள்ளிட்ட முன்னணி நடுவர்கள் இடம்பெற்று உள்ளனர். இதேபோல் ரெஃபரிகளாக (referee) இந்திய நடுவர் ரஞ்சன் மடுகலே, ஆஸ்திரேலியாவின் டேவிட் பூன் உள்ளிட்டோர் இடம்பெற்று உள்ளனர்.