குறிப்பிட்ட சில சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி தீா்வைகளில் மத்திய நோ்முக வரிகள், சுங்க வாரியம் கடந்த ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி சலுகையை வழங்கி அறிக்கை வெளியிட்டு இருந்தது. தற்போது வரை அமலில் உள்ள அந்தச் சலுகையை சா்வதேச அளவில் எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் மேலும் ஆறு மாதங்களுக்கு, அதாவது 2023ஆம் ஆண்டு மாா்ச் மாதம் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதன் மூலம், நாட்டில் சமையல் எண்ணெய்யின் சில்லறை விற்பனை விலை இந்த விழாக் காலங்களில் மேலும் கணிசமாகக் குறைய வாய்ப்பு உள்ளதால் மத்திய அரசின் மத்திய நுகா்வோா் நலன், உணவு பொதுவிநியோக அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.