இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவுடன் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்றது. இதில் ஏற்கனவே இரண்டு போட்டிகள் நடந்த நிலையில், தென்னாப்பிரிக்கா மற்றும் இந்திய அணி தலா ஒரு போட்டியில் வெற்றிப்பெற்றிருந்தது. இதைத்தொடர்ந்து, ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியுடன் டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணி பங்கேற்கும் 2ஆவது டி20 போட்டி அஸ்ஸாம் மாநிலம், கவுகாத்தியில் உள்ள மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்றது. இந்த நிலையில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் எடுத்தது. இதில், கே.எல்.ராகுல் 57 ரன்களும், கேப்டன் ரோகித் சர்மா 43 ரன்களும் கோலி அதிரடியாக 49 ரன்களும் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 61 ரன்களும் எடுத்தனர். தொடர்ந்து, 238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 221 ரன்கள் மட்டுமே எடுத்தது. தென்னாப்பிரிக்கா அணியின் வீரர் மில்லர் அதிரடியாக ஆடி 47 பந்துகளில் 106 ரன்கள் எடுத்தார். அவரது அதிரடி சதம் அந்த அணிக்கு பலனளிக்கவில்லை. இதனால், 17 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை கைப்பற்றியதுடன், 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை 2-0 என்ற கணக்கில் தனது சொந்த மண்ணில் வென்றது இந்திய அணி.