டெல்லியில் உள்ள தில்லி பிரகதி மைதானத்தில் நடைபெற்று வரும் 6ஆவது இந்திய கைப்பேசி மாநாட்டை பிரதமா் மோடி இன்று தொடக்கி வைத்தார். அங்கு, அதிவேக அலைக்கற்றைத் திறன் கொண்ட ஐந்தாம் தலைமுறை என்கிற 5ஜி சேவையையும் அவர் நாட்டுக்கு அறிமுகப்படுத்தி தொடங்கி வைத்தார். பின்னர், 5ஜி சேவையின் செயல்பாடு குறித்து பிரதமர் மோடிக்கு சோதனையாக காண்பிக்கப்பட்டது.