ஆளுநர் மாளிகையில் நவராத்திரி கொலு அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சி பல்வேறு தரப்பினரிடம் பாராட்டு பெற்றுள்ளது. இந்நிலையில் மக்களின் வேண்டுகோளுக்கிணங்க ஆளுநர் மாளிகையில் வைக்கப்பட்டுள்ள கொலு கண்காட்சியை இன்று முதல் வரும் அக்டோபர் 5ஆம் தேதி வரை தினமும் மாலை 3 மணி முதல் 5 மணி வரை மாணவர்கள் உள்பட பொதுமக்கள் பார்வையிடலாம். விருப்பமுள்ளவர்கள் தங்களது பெயர், முகவரி, தொடர்பு எண், அடையாள சான்று மற்றும் பார்வையிடும் நாள் ஆகியவற்றை ஆளுநர் மாளிகையின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும் என்று ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.