டெல்லியில் ஒடும் பேருந்தில் நிர்பயாவை சீரழித்த சம்பவம் போன்று மும்பையில்,பெண் ஒருவரை மிகக் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்து சீரழித்துள்ளது ஒரு கும்பல்.
மும்பை புறநகர் அந்தேரியில் சகி நாகா என்ற பகுதியில் நிறுத்தப்பட்ட வேனில் அதிகாலை 34 வயதுடைய பெண்ணை அங்குள்ள ஒரு கும்பல் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளது.பாதிக்கப்பட்ட பெண்ணின் உறுப்புகளில் இரும்பு ராடை வைத்து குத்தி கிழித்துள்ளனர்.கொத்துஉயிரும் கொல உயிருமாக முனகிக் கொண்டிருந்த ஒரு பெண்ணை அவ்வழியாக சென்ற ஒருவர் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.அப்பகுதிக்கு விரைந்து வந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் கடந்த பெண்ணை மீட்டு அங்குள்ள ஒரு ராஜ்வாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.இது தொடர்பாக 45 வயதுடைய மோகன் சவுகான் என்பவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணின் உடல் உறுப்புகள் கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும்,அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும், மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.டெல்லியில் நிர்பயா ஓடும் பேருந்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்.நிர்பயாவின் உடல் உறுப்புகளில் இரும்பு ராடை சொருகியிருந்தனர்.அந்த சம்பவத்தை போன்ற தற்போது நடந்துள்ள பாலியல் வன்கொடுமை சம்பவத்திலும் நடந்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.இந்த குற்றத்தில் மேலும் தொடர்புடைய குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக குற்றவியல் ஆவணக் காப்பகம் எச்சரித்துள்ள நிலையில்,ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒரு பெண் பலியாக்கப்படுவதுவேதனையளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
.