சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை பொருத்து இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பினர் பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றி அமைப்பது போல் சிலிண்டர் விலையை மாதம் ஒரு முறை அல்லது இரு முறை மாற்றி அமைத்து வருகின்றனர். அதன்படி இன்று வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை ரூ.36 குறைந்து ரூ.2,045லிருந்து ரூ.2009க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் கடந்த மூன்று மாதமாக எந்தவித மாற்றமும் இல்லாமல் ரூ.1068க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை மாற்றம் இன்று முதல் அமலுக்கு வருவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.