சென்னை, அடையாறு பகுதியில் உள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 95ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்தும் விதமாக முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது, அவருடன் அமைச்சர்கள், நடிகர் பிரபு உட்பட சிவாஜி கணேசன் குடும்பத்தார் மற்றும் திரைத்துறையினர் பங்கேற்றனர். 1972ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி பிறந்த சிவாஜி கணேசன் நடிப்பை தன் சுவாசம் போல எண்ணி வாழ்ந்து வந்ததால் தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல் உலக அளவில் நடிகர் சிவாஜி கணேசனுக்கு என்றென்றும் தனி இடம் உள்ளது.