இந்தி சினிமாவில் 1960 மற்றும் 1970களில் முன்னணி நடிகையாக வளம் வந்த குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஆஷா பரேக்-க்கு 2020ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் அறிவித்துள்ளார். சினிமா துறையில் சிறந்த முறையில் பணியாற்றியவர்களை பெருமைப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் தாதா சாகேப் விருது வழங்கப்பட்டு வருகிறது. சத்யஜித் ரே, பிருத்விராஜ் கபூர், நாகிரெட்டி, எல்.வி. பிரசாத், ராஜ்கபூர், லதா மங்கேஷ்கர், சிவாஜி கணேசன், கே. பாலசந்தர், கே. விஸ்வநாத் உள்ளிட்டோருக்கு தாதா சாகேப் பால்கே விருது இதுவரை வழங்கப்பட்டுள்ளது.