தமிழகம் முழுவதும் உள்ள அரசுப்பள்ளிகளில் பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியர்கள், பணியாளர்களின் ஓய்வு பெறும் வயதும் 60-ஆக உயர்த்தப்படுவதாகவும், புதிய நடைமுறை நடப்பு செப்டம்பர் மாதமே அமலுக்கு வருவதாகவும் பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயது 59-ல் இருந்து 60-ஆக உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது பகுதிநேர ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயது நீட்டிக்கப்பட்டுள்ளது.