உலகின் முன்னணி தகவல் பறிமாற்ற தளமான வாட்ஸ் ஆப்பில் புதிய அப்டேட் செய்யப்படவுள்ளது. அதன்படி, வாட்ஸ்அப்-ல் 32 பேர் வரை ‘குரூப் கால்’ செய்யும் புதிய வசதியை அறிமுகப்படுத்த உள்ளதாக மெட்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார். அவ்வப்போது புதிய அப்டேட்களை செய்துக்கொண்டு இருக்கும் வாட்ஸ்அப்க்கு இந்தியாவில் 49 கோடி வாடிக்கையாளர்கள் இருப்பதாக தெரிகிறது. எனவே, சந்தையில் வாடிக்கையாளர்களை நிலைத்திருக்க வைக்க மற்றும் புதிய வசதி சந்தையில் போட்டியை அதிகரிக்க இந்த அப்டேட் உதவிகரமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.