தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் சகோதரர் தேவராஜ். இவர், சென்னை ஓட்டேரியிலுள்ள நாராயணா முதல் தெருவில் அமைந்துள்ள தனது வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தேவராஜ் நேற்று இரவு தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர் அவரது உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த சில நாட்களாக கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த தேவராஜ் அதன் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.