செல் போன்களால் பல ஆபத்து ஏற்படுகிறது என ஒருசில கருத்துக்கள் இருந்தாலும், செல்போன் வைத்திருப்பதால் ஆபத்திலிருந்து காத்துக்கொள்ளலாம் என்ற தகவலை தமிழக காவல் துறை அறிவித்துள்ளது.
நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்களில் காவலன் என்ற செயலியை பதிவிறக்கம் செய்து கொண்டால், பெண்களுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தலோ அல்லது ஆபத்தான சூழ்நிலையோ ஏற்படும்போது காவல் துறையின் அவசர உதவிக்கு, அவசர உதவிக்கான எஸ் ஒ எஸ் பட்டனை ஒருமுறை தொட்டால் போதும் . இல்லை என்றால் 3 முறை போனை உதறினால் போதும். ஒரே நேரத்தில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அபாய மணியும், நமது மொபைலில் அபாய நேரத்தில் அழைக்கப்பட பதிவு செய்து வைக்கப்பட்ட நமது உறவினர், அல்லது நண்பர்கள் என மூவருக்கும் தகவல் செல்லும்.
இதை பயன்படுத்தும் நபரின் இருப்பிட தகவல், அந்த இருப்பிடத்தின் வரைபடம் காவல்துறை உட்பட்ட 4 எண்களுக்கு தானாகவே பகிரப்படும். அதுமட்டுமல்லாது அவசரபட்டனை தொட்டவுடன் செல்போனில் உள்ள கேமரா தானாகவே 15 வினாடிகள் வீடியோ எடுத்து காவல் கட்டுப்பாட்டு மையத்துக்கு அனுப்பிவிடும். செல்போன் அலை தொடர்பு இல்லாத இடங்களிலும் இந்த எச்சரிக்கைச் செய்தியை அனுப்பமுடியும்.
இந்த “காவலன் செயலி” பயன்பாடு தற்போது கல்லூரி மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கிறது. வேலைக்குச் செல்லும் பெண்கள், மாணவிகள் என பெண்கள் அனைவரும் இச்செயலியை தமது ஸ்மார்ட் போன்களில் பதிவிறக்கம் செய்து கொள்வது நல்லது. மேலும் இச்செயலியை பயன்படுத்தியதால் சில குற்றவாளிகளும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டு தண்டனைக்குட்படுத்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
ஸ்மார்ட் போன் இல்லாதவர்கள் அவசர உதவி 100,1091, 1098 ஆகிய எங்களோடு தொடர்பு கொள்ளலாம் எனவும். இந்தியஅளவில் 181 என்ற எண் பெண்களுக்கான உதவி எண்ணாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது.