இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தனது பேஸ்புக் நேரலையில் ஒரு உற்சாகமான தகவலை பகிர போவதாக அறிவித்திருந்தார். இதையடுத்து, இந்த உற்சாகமான தகவல் என்னவாக இருக்கும் என அவரின் ரசிகர்கள் ஒவ்வொருவரும் ஒரு கணிப்பை கூறத்தொடங்கினர். அதில், புதிய தொழில் தொடங்குவது, சினிமா படம் தயாரிப்பது உள்ளிட்ட ஏதேனும் ஒன்றை அறிவிக்கலாம் என தோனியின் ரசிகர்கள் கருதினர். ஆனால், தோனி பிரபல பிஸ்கெட் பாக்கெட் ஒன்றை நேரலையில் தோன்றி அறிமுகப்படுத்தியுள்ளார். தோனி தன்னுடைய வாழ்க்கையில் அடுத்தக்கட்ட நகர்வு குறித்து அறிவிப்பு வெளியிடுவார் என எதிர்ப்பார்த்த ரசிகர்கள் பிஸ்கெட் அறிவிப்பால் கடுப்பானதுடன், விளம்பர பிராங்க்காக இப்படி எல்லாம் கூடவா செய்வார் என்று இணையத்தில் கலாய்த்து வருகின்றனர்.