சென்னை, ராயபுரத்தில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி நடந்த கலவரத்தில் பல முக்கிய ஆவணங்கள் காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், அதிமுக கலவரம் தொடர்பான வழக்குகள் சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதைத்தொடர்ந்து சிபிசிஐடி அதிகாரிகள் மேற்கொண்ட வழக்கு விசாரணையில் காணாமல் போன 113 ஆவணங்களும் ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி-யிடமிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், தொலைந்துப்போனதாக புகார் அளிக்கப்பட்ட அனைத்து ஆவணங்களையும் மீட்டுள்ள சிபிசிஐடி காவல்துறையினர் அவற்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.