தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி 2 நாட்கள் பயணமாக இன்று மாலை 5 மணிக்கு டெல்லி பயணப்பட இருக்கிறார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக, ஆளுநர் இன்று மாலை தமிழகத்தில் இருந்து டெல்லி செல்கிறார். அங்கு அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, தமிழகத்தில் 5 மாவட்டங்களில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்-ஐ சேர்ந்தவர்களுக்கு சொந்தமான 15 இடங்களில் கடந்த 5 நாட்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. இந்த நிலையில், ஆளுநர் டெல்லி பயணம் அரசியல் வட்டாரங்களில் பேசுப்பொருளாகி வருகிறது.