புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வைரஸ் காய்ச்சல் பரவல் காரணமாக 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த வாரம் விடுமுறை அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து காய்ச்சல் பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், ஒரு வாரத்திற்கு பிறகு பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளது. வைரஸ் காய்ச்சல் பாதிப்பு படிப்படியாக குறைந்துவரும் நிலையில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக அந்த மாநில நிர்வாகம் தெரிவித்துள்ளது.