உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம் தனது புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதில், Stories என்ற பிரிவில் முன்பு 1 நிமிட வீடியோவை பதிவேற்றம் செய்தால், அது 15 விநாடி வீடியோக்களாக 4 பிரிவுகளாக பிரிந்து பதிவேற்றம் ஆகும். இதையடுத்து, தற்போது ஒரே விடியோவாக 1 நிமிடம் வரையில் பதிவேற்றும் வசதியை இன்ஸ்டாகிராம் சமூகவலைதளம் அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு குறிப்பிட்ட சிலரிடம் மட்டும் இந்த புதிய வசதியை இன்ஸ்டாகிராம் பரிசோதித்து வந்தது குறிப்பிடத்தக்கது.